கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சத வீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சோறு பார்சல், பராட்டா ரொட்டி, கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளும், தேநீரின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.