March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் முற்போக்குக் கூட்டணி மேடையில் ஜீவன்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார்.

ஹட்டன் – என்பீல்ட் பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் ‘தாயகம்’ என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று முற்பகல் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கூட்டணி இணை தலைவர்களான திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த நிகழ்வில் இ.தொ.கா செயலாளளர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான், “நாம் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள். வெறுப்பையும், எதிர்ப்பையும் மட்டும் வைத்து அரசியல் நடத்த முடியாது. ஒன்றிணைந்த வேலைத்திட்டமே மலையகத்துக்கு வேண்டும். அதற்கான ஆரம்பமே இது” என்று கூறியுள்ளார்.