March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோதுமை மா விலை மேலும் குறைகிறது!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோவின் விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதிக்காக பகிரங்க கணக்குகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இறக்குமதி செய்யும் அளவை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பெருந்தொகையான கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அந்த சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)