January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி அமைச்சர் பதவியை இழக்கும் ரணில்!

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தொடர்ந்து தற்போது ஜனாதிபதி வசமுள்ள நிதி அமைச்சுப் பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், அது நடைமுறைக்கு வரும் போது, ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது.

எனினும் அரசியலமைப்பு திருத்தத்தில் 44 (3) சரத்துக்கு அமைய ஏதேனும் அமைசின் விடயத்திற்கு அமைச்சர் நியமிக்கப்படாவிட்டால் 14 நாட்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியினால் அந்த விடய பொறுப்பை வகிக்க முடியும்.

இதன்படி சபாநாயகர் திருத்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியிடமுள்ள நிதி அமைச்சுப் பதவியை அவர் இழப்பார்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே நவம்பர் 14 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

அதுவரையில் சபாநாயகர் அந்த திருத்தத்தில் கையெழுத்திட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய நிதி அமைச்சராக ஜனாதிபதியே வரவு செலவுத் திட்ட உரையை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.