January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை கொழும்பு 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலாகவுள்ளது.

கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் உள்ள நேரங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காக தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அந்த சபை நீர் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.