January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருட சென்ற வீட்டில் படுத்து உறங்கிய திருடர்கள்: யாழில் சம்பவம்!

திருடும் நோக்கில் வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள், அங்கேயே படுத்து உறங்கிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் நடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வீட்டார் வெளியில் சென்றிருந்த போது திருடர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டில் இருந்த மதுபான போத்தல்களை எடுத்து அதனை அருந்திவிட்டு, அங்கேயே சமைத்து உணவும் சாப்பிட்டுள்ள அவர்கள், அந்த வீட்டிலேயே படுத்து உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காலையில் வீட்டார் வந்து பார்த்த போது, வீட்டினுள் இருவர் உறக்கத்தில் இருப்பதனை கண்டு அயலவர்களை அழைத்துள்ளனர்.

இவ்வேளையில் வீட்டாரின் சத்தம் கேட்டு திருடர்கள் இருவரும் தப்பியோடிய போது, அவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்டவரை வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சுன்னாகம் மற்றும் மூளாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.