March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் சேவையில் உடற்தகைமையைப் பேணாது 4000 பேர்!

இலங்கை பொலிஸ் சேவையில் முறையான உடற்தகைமையை பேணாத 4000 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் குறித்த பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது பொலிஸ் சேவையில் திடகாத்திரமாக உடற்தகைமையைப் பேணாத 4000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி கடமையை செய்வதால், நேர்த்தியாக கடமைகளை செய்யும் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து தேவையான ஆவணங்களை தயாரித்து அமைச்சுக்கு வழங்குமாறு அமைச்சர் டிரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.