
Man holding red aids ribbon
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் அடையாளம் காணபட்டுள்ள எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் 342 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறாக அடையாளம் காணப்படுவோரில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் என்றும், அவர்களிடையே பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.