மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்க கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
இதற்கமைய 30 வீதத்தால் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பெருமளவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கையில் இன்னும் கட்டணத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபா வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.