November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை வரவேற்கின்றோம்”

File Photo

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கக் கூடியது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் என சுமந்திரன் எம்.பி கூறியுள்ளார்.