தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.