ஆட்டோக்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, தற்போது ஆட்டோக்களுக்கு கீயூஆர் முறையில் வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீட்டராக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் மற்றைய மாகாணங்களிலும் அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.