File Photo
ஒக்டோபர் 25 ஆம் திகதி பகுதியளவிலான சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை இலங்கையர்கள் பார்க்க முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாலை 5.27 மணியளவில் பார்வையிட முடியும் என்றும், இதன்போது சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியுமாக இருக்கும் என்றும், இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.19 மணிக்கு ஆரம்பித்து, மாலை 6.32 மணிக்கு முடியும்.
இதன்போது அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இதுவும் சூரியன் மறைகையில்தான். எனவே, மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்நிகழ்வு நடக்கவுள்ளது.