கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், இந்து சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையர்களின் வாழ்விலிருந்து இருள் நீங்கி,பட்டினி,வேதனை போலவே அசௌகரியங்களால் வாடும் அனைத்து மக்களின் வாழ்விலிருந்தும் கண்ணீர் நீங்கி, தீபாவளி நாளில் தீய கெடுதிகள் அழிந்தது போலவே தற்கால கெடுதிகளும் நீங்கி நலவுகள் மோலோங்க பிரார்த்திப்பதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.