பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் அது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் தற்போது செயற்படும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 02 வாரங்களுக்குள் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை நியமிக்கப்பதற்கு எதிர்பார்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த பேரவை ஊடாக ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.