இலங்கையில் எதிர்வரும் தினங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும் என்பதுடன், இடி – மின்னல் ஏற்படக் கூடும் என்றும், இதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.