January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் காலமானார்.

88 வயதாக தெளிவத்தை ஜோசப், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மலையக இலக்கிய படைப்பாளிகளில் முக்கியமான ஒருவரான இவர், அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்

ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். பதுளையில் பிறந்த இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர்.

இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.