இலங்கை முழுவதும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் ஒக்டோபர் 25 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
24 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டகையையொட்டியே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த விடுமுறைக்கு பதிலாக, ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமைப் போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.