File Photo
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேரை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 5 தொடக்கம் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி விடுதலை செய்யப்படவுள்ளவர்களின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய வரதராஜன், ரகுபதி சர்மா, இலங்கேஷ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா, ஜெபநேசன் ஆகியோர் விடுதலையாகவுள்ளனர்.
இதேவேளை இவர்களை விடுதலை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்காக வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சருக்கும் நன்றி கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.