
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று முற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றார்.
டொனால்ட் லூ தனது விஜயத்தின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை பிராந்திய பாதுகாப்பு, மனித உரிமைகள் தொடர்பாக டொனால்ட் லூ ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.