
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகம் சென்றுள்ள சிறீதரன் எம்.பி, சென்னை – பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கைகயின் சமகால அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான திரு.சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் திரு.மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.