ஆட்டோக்களுக்கு வாராந்தம் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது ஆட்டோக்களுக்காக வாராந்தம் 5 லீட்டர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்படுகின்றது.
இது தங்களுக்கு போதுமானது அல்ல என்று ஆட்டோ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பிய போது, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.
பதிவு செய்துள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருள் அளவை அடுத்த வாரங்களில் அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம். கியூ-ஆர் முறைக்குள் இதனை உள்வாங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.