January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதாரண தர பெறுபேறு வெளியாகும் தினம் தொடர்பான அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பரீட்சை பெறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி பாடசாலை அதிபர்களால் தமது பரீட்சார்த்திகள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டவுடன், பெறுபேறுகள் வெளியாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை கொவிட் பரவல் காரணமாக இந்த வருடம் மே மாதத்திலேயே நடைபெற்றது.