முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு திட்டமிடப்படுகின்றதா? என்று ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அவ்வாறு எந்தவித கலந்துரையாடலும் அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெறவில்லை என்றார்.