‘ஜன சபை’ முறைமையை நிறுவுவதற்காக தேசிய ஜன சபை தேசிய செயலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமிய மட்டத்தில் பங்கேற்பு ஜனநாயகப் பண்புகளுடன் இயங்குகின்ற நிறுவனக் கட்டமைப்பொன்றில், அரச அலுவலர்களும் மற்றும் பொது மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள பிரச்சினைகளைக் கலந்துரையாடக் கூடிய, அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானிக்கக் கூடிய மற்றும் கிராமிய மக்களுக்கு தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் பங்கேற்கக் கூடிய பலம்வாய்ந்த பொறிமுறையொன்று தேவையாகும்.
அரச கொள்கை வகுப்புக்காக மக்களுக்கு தமது கருத்துக்களை முனைப்பாக வழங்கக் கூடியதாக இருக்கின்ற மற்றும் சமூகப் பங்கேற்புடன் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய பொறிமுறையின் மூலம் அதிகாரிகள்வாதம் மற்றும் தன்னிச்சையான அரசியல்மயப்படுத்தல் மூலம் நிகழக்கூடிய பொதுமக்கள் அழுத்தங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் தடுப்பதற்கு இயலுமாகும்.
அதற்கமைய, அரச கொள்கை வகுப்பு மற்றும் குறித்த கொள்கையை வெற்றிகரமாக அமுலாக்குவதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் பெற்றுக்கொள்ளக் கூடிய சுயாதீன நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைமையில் ‘ஜன சபை’ முறைமை தொடர்பான கொள்கைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ‘கிராமிய ஜன சபை’ நிறுவுவதற்கும், தேசிய மட்டத்தில் தேசிய ஜன சபையை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள ‘ஜன சபை’ முறைமை அரசானது அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்வதற்கும், ‘ஜன சபை’ முறைமை நிறுவுவதற்காக தேசிய மட்டத்தில் சுயாதீன கேந்திர நிறுவனமாக தேசிய ஜன சபை செயலகத்தை தாபிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.