April 14, 2025 3:51:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை எழுத்தாளருக்கு சர்வதேச ‘புக்கர்’ விருது!

2022 ஆம் ஆண்டின் சர்வதேச ‘புக்கர்’ விருதை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.

வருடாந்தம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘புக்கர்’ விருது வழங்கும் விழா இம்முறை லண்டனில் உள்ள ரவுண்ட்ஹவுஸில் நடைபெற்றது.

இதில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற புனைகதைக்காக விருது வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து இம்முறை 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் இலங்கை எழுத்தாளரின் நாவல் விருதுக்கு தெரிவாகியுள்ளது.

குறித்த நாவல் விடுதலைப் புலிகள் – இராணுவத்திற்கு இடையே இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது.