January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வருமாறு கமல் ஹாசனுக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல் ஹாசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழகம் சென்றுள்ள சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநில தலைமையகத்தில் திங்கட்கிழமை கமல் ஹாசனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதன்போது, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்று கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கமல் ஹாசனை இலங்கைக்கு வருமாறு சிறீதரன் எம்.பி அழைப்பு விடுத்ததாகவும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.