January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலைகள் குறைப்பு!

ஒக்டோபர் 17 ஆம் திகதி இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்புக்கமைய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 370 ரூபாவுக்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 415 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மற்றைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறைக்கப்பட்ட விலைகளுக்கமையவே தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.