கொழும்பு நகர வீதியோர வாகன தரிப்பிடங்களில் கட்டணம் அறவிடுவது தொடர்பில் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த வாகன தரிப்பிடங்களில் அனுமதியளிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளை தவிர வேறு எவருக்கும் கட்டணங்களை அறவிட முடியாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் 19 இடங்களில் உள்ள வாகன தரிப்பிடங்களில் கட்டணங்கள் அறவிடப்படும் நிலையில், அந்த இடங்களில் தங்களால் அனுமதியளிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே கட்டணங்களை அறவிட முடியும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.