உலகளாவிய பட்டினிச் சுட்டியில் இலங்கை 64 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
121 நாடுகளில் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இலங்கைக்கு 64 ஆவது இடம் கிடைத்துள்ளது.
100 புள்ளிகளுக்கு 13.6 புள்ளிகளைப் பெற்று இலங்கை பட்டினிச் சுட்டி பட்டியலில் முன்னேறியுள்ளது.
நாடுகளில் பட்டினியை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமையவே உலகளாவிய பட்டினிச் சுட்டி தயாரிக்கப்படுகிறது.
இதன்போது நாடுகளில் உணவு பற்றாக்குறை, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, சரிவிகித உணவு வழங்கும் திறன், வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்ற பிரச்சினைகள் இங்கு பரிசீலிக்கப்படுகின்றன.
இதன்படி கடந்த வருடத்தில் 116 நாடுகளிடையே பட்டினி சுட்டி பட்டியலில் 65ஆவது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை 64 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அத்துடன் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்து இம்முறை 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.