இப்போது தேர்தலை நடத்தினாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
”ஒன்றாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் நாவலப்பிட்டியில் பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மகிந்த இவ்வாறு கூறியுள்ளார்.
எங்களுக்கு தவறிய இடங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இதற்கமைய அவற்றை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.