”ஒன்றாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்று இன்று நவாலப்பிட்டியில் நடைபெறுகின்றது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதன்படி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று முற்பகல் மகிந்த ராஜபக்ஷ நாவலப்பிட்டி நகருக்கு சென்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நாவலப்பிட்டி நகரில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வேளையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.