May 26, 2025 2:01:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸிலின் பதவியை நாமலுக்கு வழங்க யோசனை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான யோசனையொன்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கட்சி செயலாளரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது இது தொடர்பாக உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பதவி வகிக்கும் நிலையில் அவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.