May 28, 2025 16:23:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோதுமை விலை குறைப்பால் கொத்து விலை குறைகிறது!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஹோட்டல்களில் கொத்து ரொட்டியின் விலையை குறைப்பதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 375 ரூபாவில் இருந்து 290 ரூபா வரையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.