November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் பிரதமராக தயாராகும் மகிந்த!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர், புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணை இன்று இரத்தாகவில்லை என்றும் இதனால் தமது கட்சியை சேர்ந்தவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சியில் பலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தனவை பதவி விலகச் செய்து, மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.