May 28, 2025 12:19:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரன், சாணக்கியனுடன் எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.