January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார அணையாடைகள்!

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார அணையாடைகளை (சானிட்டரி நாப்கின்) விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

10 தொடக்கம் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு இதனை விநியோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இவற்றை விநியோகிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அணையாடைகளின் விலை உயர்வுகளால் மாணவிகளுக்கு அவற்றை கொள்வனவு செய்வதில் நிலவும் பொருளாதார பிரச்சனைகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அணையாடைகளை உள்நாட்டில் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.