January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்குடன் தொடர்புடையதாகவே சனத் நிஷாந்தவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனத் நிஷாந்தவை இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய காரணத்தினால் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.