January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு இலட்சத்திற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி!

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் இருந்து 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திருத்தப்பட்டுள்ள சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.