சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுவரையில் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளுக்கமைய இவர் 250 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், அவரின் நிதி நிறுவன அலுவலகம் அமைந்திருந்த கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் முதலீடு செய்த மற்றும் மோசடிக்குகுள் சிக்கியவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.