நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விசேட விஜயம் மேற்கொண்டு கடந்த 9 ஆம் திகதி எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கு வருகை தந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிலேயே அவர் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் அவர் கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாகவும், இதன்போது எரிக் சொல்ஹெய்மை சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan 🇱🇰 President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership!
Proud to be appointed his International Climate Adviser together with @MohamedNasheed @RW_UNP @SriLankaTweet pic.twitter.com/1UnhQOCA4j
— Erik Solheim (@ErikSolheim) October 12, 2022