ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், அது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆகியோருக்கு விசேட ஆலோசனைக் கோவையொன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறுந்தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தூர சேவைகளில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ரயில்களுக்குள் நுழையும் திருடர்கள் பயணிகளை அச்சுறுத்தி பணம், தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரிப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனை தொடர்ந்தே அது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.