January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போதுள்ள பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் 8000 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாகக் நிறைவேற்றி தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்கு பதிலாக தலைவர் அடிப்படையில் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.