January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறியது!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பன புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடந்த போது, தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

அத்துடன் பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.

இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு உள்நாட்டு பொறிமுறைக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.