January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடர்பான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடக்கவுள்ளது.

30 நாடுகளின் இணை அனுசரணையுடன் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த தீர்மான வரைபை முன்வைத்துள்ளன.

பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை வெளிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பேரவையில் அறிவிக்கவுள்ளார்.