January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மினுவங்கொட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

File Photo

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட – கமங்கெதர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தந்தை மற்றும் அவரின் இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.