தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.
கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் குறித்த கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி தொலைபேசி அழைப்பு, இணைய பொதிகள் மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் 2.5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக அதிகரிக்கப்படும் கட்டண விபரங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.