January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கோபா’ தலைவராக கபீர்: தேசிய சபையில் இருந்து ஜீவன் விலகல்!

‘கோபா’ எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான பிரேரணையை இன்று சபாநாயகரிடம் முன்வைத்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் கபீர் ஹசீமிற்கு கோபா குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தேசிய சபையிலிருந்து விலகியுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் பதவி விலகலால் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்திற்கு அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.