லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,720 ரூபாவாகும்.
இதேவேளை 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 800 ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.