January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்நாட்டு பால்மா விலைகள் உயர்வு!

ஒக்டோபர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு உள்நாட்டு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 400 கிராம் பால்மா பக்கட்டு ஒன்றின் விலை 850 ரூபாவில் இருந்து 950 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ பால்மாவின் விலை 2120 ரூபாவில் இருந்து 2350 ரூபா வரையில் உயர்த்தப்படவுள்ளது.

அதேபோன்று பால் பக்கட் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.